பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2015

தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் பஷில் ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான பொறுப்பை முழுமையாக ஏற்று அந்த தேர்தல் பிரசார செயற்பாட்டில்
முக்கியஸ்தராக செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும்  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பாவுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளி கட்சிகளும் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை மிகவும் நீதியாக நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய அரச
அதிகாரிகள் உள்ளிட்ட  பொலிஸார், பாதுகாப்பு தரப்பினர், மற்றும் கம்பஹா மாவட்ட உள்ளிட்ட நாடு முழுவதும்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.