நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித்தேர்தலில் பொது எதிரணி வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்குவதாக
அறிவித்தததை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரங்களை மேற்கொள்கிறார். நேற்று திருக்கோவில் பொத்துவில் கல்முனை பிரதேசங்களில் பரப்புரைகளை மேற்கொண்டார். இதில் திருக்கோவில் பிரதேச சபை உதவி தவிசாளர் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக்கட்சியின் திருக்கோவில் பிரதேச முக்கியஸ்தர்களும் பொது மக்களும் இணைந்து கொண்டனர்.