பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2015

ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் அன்பழகனின் வேலை முடிந்துவிட்டது : நீதிபதி குமாரசாமி

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தங்களை இணைத்துக் கொள்ள திமுக தரப்பில்
கோரிக்கை மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், விசாரணை நீதிமன்றத்துடன் க. அன்பழகனின் வேலை முடிந்துவிட்டதாகவும் நீதிபதி குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது அரசுத்தரப்பு வழக்குரைஞருக்கு உதவியாக 3-ஆவது பிரதிவாதியாக ஆஜராக அனுமதிக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.