பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2015

இலங்கை மீதான தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

இலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைத்து, பெல்ஜிய உதவி பிரதமர் டிட்லர் ரேய்டெர்ஸ் உட்பட்டவர்களை சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்படடுள்ளது.
மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் துறை ஆணையாளர் கர்மெனு வெலாவையும் சந்தித்தார்.
இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பிலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டன