பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2015

கூட்டமைப்பின் வாகனம் மீது வேலணையில் நேற்று தாக்குதல்




வேலணைப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்களின் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று பி.ப 3.30 மணியள வில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் விந்தன் உட்பட 20 பேர் அடங்கிய குழுவினர் வேலணைப் பகுதிக்குச் சென்று கூட்டம் நடத்த முற்பட்டபோதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வேலணை நீராவியடி சனசமூக நிலையத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தொலைபேசி மூலம் தமது வருகை தொடர்பாக தெரியப்படுத்திதையடுத்து அப்பகுதிக்கு வந்த மேலும் இருவர் எமது வாகனங்கள் மீது கற்களை வீசித் தாக்கினர்.

அதில் ஒரு வாகனம் சேதமடைந்ததாக மாகாண சபை உறுப்பினர் விந்தன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.