பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2015

பசில், கோத்தபாயவுக்கு எதிராக மேர்வின் சில்வா முறைப்பாடு


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
ஆட்சிக் காலத்தில் இவர்கள் இருவரும் செய்த ஊழல்கள் தொடர்பிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.