பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2015

தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள்


தமிழ் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரச புலனாய்வினர் வகுத்த திட்டம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என்ற பெயரில் மக்களைக்குழப்புகின்ற கைங்கரியத்தை புலனாய்வாளர்கள் தற்சமயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக தங்களால் உருவாக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தை அச்சிட்டு இலங்கைத்தமிழரசுக்கட்சி எனவும் பெயரிட்டு ஜந்தே நிமிடங்கள் ஒதுக்குங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முன்பாகவே எம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள் தேர்தலைப்பகிஸ்கரிப்போம் வாக்களிப்பைத்தவிர்ப்போம் அல்லது எமது வாக்குகளை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம் என்ற தோரணையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என சற்றுமுன்னர் யாழ்ப்பாணம்கிளிநொச்சி முல்லைத்தீவு
மாவட்டங்களில் இரவோடிரவாக இராணுவப்புலனாய்வாளர்களால் துண்டுப்பிரசுரம் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவற்றைக்கண்டு ஏமாறாமல் அனைவரும் வாக்களிக்க செல்லுமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழ்மக்களின் வாக்களிப்பை தடுக்கும் நோக்குடன் அரச புலனாய்வாளர்களின் இச்செயல் அம்பலமாகியமையால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அதிருப்தி அடைந்துள்ளதோடு வதந்திகளைக்கண்டு ஏமாறாமல் அனைவரும் வாக்களிக்கச்செல்லுமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோளை விடுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.