பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

ஜெ., மேல்முறையீட்டில் குறுக்கிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் : அன்பழகனுக்கு குமாரசாமி எச்சரிக்கை

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.   விசாரணை நீதிபதி குமாரசாமி விசாரணை செய்து வருகிறார்.

இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமென, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில், கோரிக்கை விடப்பட்டது.

அதற்கு நீதிபதி குமாரசாமி,  ‘’அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?   அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள்.  தவிர,  ஜெயலலிதா மேல்முறயீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும்.  அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும்.  நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்’’ என்று கடும் எச்சரி