பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2015

ஆட்டம் காட்டிய விஜயலட்சுமி மாற்றப்பட்டார்


news
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்  விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
 
இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக வடக்குமாகாண முதலமைச்சர்  சி.வி விக்கினேஸ்வரனுடன் முரண்பட்ட இவர் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் இடையூறு விளைவித்திருந்தார் .
 
அதன்படி வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இவர் வடமாகாண பிரதம செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.