பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2015

பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைது


பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக போட்டியிட்ட காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் பிரதி அமைச்சரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹாவத்தைப் பிரதேசத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மீது, பிரதி அமைச்சர் பிரேமலால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கஹாவத்தை பிரதேச வர்த்தகர் சங்க செயலாளர் உயிரிழந்திருந்தார்.
சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த பிரதி அமைச்சரை அளுத்கம பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர வாக்களிப்பில் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது