பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2015

சிறிசேனவுடன் இணைந்து வாக்களித்த மகிந்த


அரசாங்கம் தேர்தலில் களம் இறக்கிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவ தோற்றத்தை கொண்ட ஆர்.ஏ. சிறிசேனவுடன் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை வாக்களிக்க சென்றார்.
ஜனாதிபதி வாக்களித்த மெதமுலன டி. ராஜபக்ஷ மகாவித்தியாலத்தில் ஆர்.ஏ. சிறிசேனவும் வாக்களித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் ஆர்.ஏ. சிறிசேன என்பவரை களமிறக்கியதாக கூறப்படுகிறது.
இவரது தேர்தல் விளம்பரங்கள் தமிழ் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.