பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2015

கிழக்கு மாகாணசபை கூட்டமைப்புக்கு அதிகாரம்/முஸ்லிம் காங்கிரஸ் இணக்கம்


கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் கிழக்கு மாகாண சபையின் அரசியல் நிலவரம் குறித்து இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இதன் பிரதிபலனாக கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் 37 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் 11 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 2 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கூட்டமைப்பை ஆதரிக்க தீர்மானித்துள்ளதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தை நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.