பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2015

யாழில் கோர விபத்து ; இருவர் சாவு


ஏ - 9 வீதி யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில்  இன்று காலை 6.30 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 கொடிகாமம் - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பேருந்து ஒன்று முன்னாள் சென்ற முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியதில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பொலநறுவை மற்றும் நுவரேலியாவைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.