பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2015

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு மைத்திரியிடம் கமரூன் கோரிக்கை


பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தமது கோரிக்கையை இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே கமரூன் இந்தக்கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தாம் இலங்கைக்கு வந்தபோது அங்கு முன்னேற்றக்கரமான பல விடயங்களை முன்னெடுக்க முடியும் என்பதை தம்மால் அவதானிக்க முடிந்தது என்றும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக நடததுவதற்கு ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் அவர் பாராட்டை தெரிவித்துள்ளார்.