பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2015

புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன் வீதி தார் வீதியாகின்றது







மடத்துவெளி கம்பிலியன் வீதிக்கு தார் ஊற்றபடவுள்ளது .இதன்மூலம்
மடத்துவெளி சமூக சேவையாளர் திரு சிவலிங்கம் ஐயா(பொலிசார் )நீண்ட நாளாக  முயற்சி செய்து வந்த இந்த வீதி
 புதுமெ ருகூட்டும் எண்ணம் நிறைவேறுகிறது
இந்த வருட பிரதேச சபையின் வீதி விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ மடத்துவெளி கம்பிலியன் வீதி அகலமாக்கி தார் ஊற்றி புதுவடிவம் கொடுக்க ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது  அதற்கான பணிகள்ஆரம்பமாகி  தற்போது நடைபெற்று வருங்கின்றன . முன்னாள் கூட்டுறவு சங்க  முகாமையாளர் திரு .சிவசம்பு அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்ட இந்த வீதி ஆரம்பத்தில் சிறிய ஒழுங்கை வடிவில் இருந்து வந்தது . பின்னர் திரு அ .சண்முகநாதன் அவர்களின் நீண்ட கால முயற்சியினால் மடத்துவெளி சன சமூக நிலையத்தின் சிரமதான பனி மூலம் அகன்றதாக்கப்பட்டு  மக்கி மண் கொண்டு  செப்பனிடப் பட்டு பாவனைக்கு வந்திருந்தது சனசமூக நிலையத்தின் முன்பக்கம் வீதிக்கு எதிர்புறத்தில் ஆரம்பமாகி தென்கிழக்காக சென்று மீண்டும் கிழக்கு நோக்கி திரும்பி சூரியர் கடை அருகாமையால் சென்று கடற்கரை நீளும் இந்த வீதி மடத்துவெளி மக்களின் பாரிய தேவைகளுக்கு  உகந்தாதாக இருந்து வந்தது  மடத்துவெளி பகுத்து மீன்பிடி வளத்துக்கு ஊகம் தந்து அங்கு  பிடிக்கபப்டும் மீ மீன்வளத்தை ஏற்றுமதி செய்ய ஏற்ற போக்குவரத்துக்கு உதவி வந்தது குறிப்பிடத்தக்கது  இந்த வீதியின் ஆரம்ப பகுதியின் திருப்பத்தில்  வரதீவு ஒழுங்கை முகப்பில் இருந்தும் ஒரு சிறு தெரு  வந்து சேர்ந்து இணைகிறது
(நன்றி ப டங்கள் தகவல் அ .சண்முகநாதன் )