பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2015

மகிந்த தண்டிக்கப்படுவது உறுதி; ராஜித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போது சாதாரண மனிதரே. அதனடிப்படையில் அவரும் ஏனையவர்கள் போலவே நடத்தப்படுவார் என  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 
 
ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் அரசு தண்டிக்காது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த செய்திகள் தொடர்பிலேயே ராஜித மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
ஊழல் குற்றங்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரையும் காப்பாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எவ்வித உடன்பாடுகளும் இல்லை. 
 
எனினும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரின் குடும்பத்தினரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இதனை நான் மறுக்கின்றேன். குற்றவாளிகள் தண்டிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை.
 
மகிந்தவும் இப்போது சாதாரண மனிதர்தான் . அதனடிப்படையில் ஒருபோதும் அரசு அவரைக் காப்பாற்றாது ஏனையவர்கள் போலவே நடாத்தப்படுவார்  என்று  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.