பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜன., 2015

ராஜபக்சே நேரில் ஆஜராக கொழும்பு கோர்ட் உத்தரவு


 இலங்கை சுதந்திரக் கட்சியின்  உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி என்பவர் கொழும்பு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

வடக்கு மாகாண கவுன்சில் தலைவர் பிரசன்ன ரணதுங்காவின் வீட்டில் வைத்து, என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்காக இலங்கை சுதந்திர கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்களிடம் வெற்றுத்தாள்களில் ராஜபக்சே கையொப்பம் வாங்கினார். 

முறைப்படி செயற்குழு கூட்டம் நடத்துவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆனால், அந்த கூட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரே நாளில் நடத்தப்பட்டது. தனது எதிர்ப்பாளர்களை புறக்கணித்து கட்சியின் தலைவராகிவிட ராஜபக்சே இந்த செயற்குழுவில் திட்டம் தீட்டினார். 

இதற்கு இடையூறாக என்னை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜபக்சே நீக்கி விட்டார். இந்த நீக்கம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மறு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, பிரதிவாதிகளான மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட நால்வருக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.