பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2015

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

 தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது படுகொலை வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இந்திரா, திண்டுக்கல்லில் உள்ளார். இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள இந்திரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று நண்பகலில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

 சிபிஐ அதிகாரிகளின் இந்த சோதனை நடவடிக்கை, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது