பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2015

புலிகளின் வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி மாளிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பல அதி சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளன.

இறுதிக் கட்ட போரின் பின்னர் மீட்கப்பட்ட மற்றும் போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் மீட்கப்பட்ட வாகனங்கள் பற்றிய தகவல்கள் உரிய முறையில் பதியப்பட்டிருக்கவில்லை.

பல வாகனங்கள் பற்றிய தகவல்கள் எந்தவொரு ஆவணத்திலும் பதியப்படாமலே வாகனங்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகள்,  அரசியல்வாதிகளினால் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.