பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

முன்பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சரவணபவன் எம்.பி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல்
உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தென்மராட்சி பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் குறைந்த  முன்பள்ளிகளுக்கு விஜயம் மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்ததுடன் மாணவர்களுக்கும் முன்பள்ளிகளுக்கும் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

இதனடிப்படையில் நாவற்குழி சித்திவிநாயகர் பாலர் பாடசாலை, நுணாவில் அம்பாள் முன்பள்ளி, புத்தூர் சாந்தி நளினி முன்பள்ளி, கொடிகாமம் மத்தி முன்பள்ளி, கொடிகாமம் அன்னை திரேசா முன்பள்ளி, கொடிகாமம் ஞானசூரியன் முன்பள்ளி ஆகியவற்றிற்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.