பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2015

மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு?


மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

கடந்த முறை மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, சிவசேனாவுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொடுக்கப்படாததால், பதவியேற்க அந்தக் கட்சி மறுத்துவிட்டது. ஆகையால் தற்போது சிவசேனா கட்சியின் மேல்சபை எம்பியான அனில்தேசாய்க்கு, தனிப் பொறுப்புடன் கூடிய கேபினட் அமைச்சர் பதவி வழங்கலாம் என்று கூறப்படுகிறது. 


மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் பாட்டில் தான்வே, மராட்டிய மாநில பாஜக தலைவராக இருப்பதால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்றும், அவருக்கு பதில் பாஜகவைச் சேர்ந்த மற்றொருவர் மத்திய அமைச்சராகலாம் என்று கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கக் கூடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.