பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2015

தேர்தல் முடிவுகளை மாற்றலாம் ; மறுக்கும் ஶ்ரீ லங்கா டெலிகொம்



தேர்தல் பெறுபேறுகளை ஶ்ரீ லங்கா டெலிகொம் டேமினல் லைன் பாஸ்வேட் (passwords of the Sri Lanka
Telecom terminal line) தெரிந்திருப்பின் மாற்றலாம் என ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்றைய தினம் ஶ்ரீ லங்கா டெலிகொம்மின் குழு தலைமை நிறைவேற்று அதிகாரி தெளிவூட்டியுள்ளார்.

இந்த செய்தி குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர், இது போலியான குற்றச்சாட்டு என ஏற்கனவே தெளிவாகியுள்ளது.

மேலும் இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.