பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2015

இரு வாரங்களில் மாகாண சபைகளுக்கு புதிய முதலமைச்சர்கள்! - இரண்டு மாகாண அமைச்சர்கள் இராஜினாமா


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் பல அதிரடி
நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளார்.
முதற்கட்டமாக வடக்கு மாகாண சபை தவிர ஏனைய அனைத்து மாகாண சபைகளிலும் முதலமைச்சர்கள் உட்பட அமைச்சரவை புதிதாக நியமிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ஷ அணியினர் தந்திரமான முறையில் பின்வாங்க ஆரம்பித்துள்ளதுடன் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மாகாண சபைகள் முதல் பிரதேச சபைகள் வரை இந்த மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
மாகாண சபைகளுக்கு புதிய முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை புதிதாக நியமிக்கப்பட்ட பின்னர் ராஜபக்ஷ அணியினரின் பிரதேச அதிகார மையங்களும் வலுவிழக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.