பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2015

மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் விசேட சந்திப்பு? - தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க மஹிந்த இணக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது.
வெகு விரைவில் இந்த சந்திப்பு நடத்தப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வாழ்த்துக்களை நேரில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் மேல் மாகாண முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் குறித்து இந்த சந்திப்பின் போது இருவரும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக அறிவித்துள்ளனர்.
மற்றுமொரு தரப்பினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக அறிவித்துள்ளனர்.
கட்சியில் நிலவி வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க மஹிந்த இணக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுக் கொடுக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.