பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என பா.ம.க. அறிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்களை
அறிவித்து விட்டன. ஆனால், பா.ம.க., தே.மு.தி.க., பா.ம.க. தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அக்கட்சி தலைவர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடும் எந்த கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.