பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2015

தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு


ஜனாதிபதி தேர்தல் பிரசார நட வடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் பிரசார சுவ ரொட்டிகள், பதாகைகள் உள்ளிட்ட வற்றை அகற்றுமாறு பொலிஸாரு க்கு தேர்தல் ஆணையாளர் அலுவ லகம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதே வேளை தேர்தல் பிரசார காரியாலயம் 6ஆம் திகதியுடன் நீக் கப்பட வேண்டும் எனவும் அறிவிக்க ப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட் டைகளை வீடுவீடாக விநியோகிக் கும் விசேட தினமாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தற்போதும் 90 சதவீத மான வாக்காளர் அட்டைகள் விநி யோகித்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதி பர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றும் தங்களுக்கான வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், 8 ஆம் திகதிக்கு முன்னதாக தங்களின் பிரதேச தபால் நிலை யங்களுக்கு சென்று அதனை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேநேரம் தேர்தல் கண்காணிப்பு பணி களுக்காக அழைக்கப்பட்டிருந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுக்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளன.

பொதுநலவாய ஒன்றியம் உட்பட பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதி நிதிகளை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்றுமுன்தினம் ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.