பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2015

எதிர்க்கட்சிகளின் கணக்குகள் பிழைத்து விட்டன: பசில் ராஜபக்ச


எதிர்க்கட்சிகளின் கணக்குகள் பிழைத்து விட்டன என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளப் போகும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
பல்வேறு புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன.
தேர்தல் பிரச்சார காலம் முடிவடையும் வரையில் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன.
ஜனாதிபதி தொடர்பில் பொய்யான தகவல்களையும் சேறு பூசல்களையும் எதிர்க்கட்சிகள் வெளியிட்டு வந்தன.
எனினும் தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் இவற்றை கருத்திற்கொள்ளாது ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றியை உறுதி செய்வார்கள்.
உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சாரக் காலம் முடிவடைந்ததன் பின்னரும் இணையம் ஊடாக, பேஸ்புக் ஊடாக, குறுந்தகவல் ஊடாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படலாம்.
எதிர்க்கட்சிகள் அதிகார மோகத்தில் செய்வது அறியாது இவ்வாறான காரியங்களில் ஈடபட்டு வருகின்றன.
எனினும், 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியீட்டி இவர்களுக்கு நல்லதொரு பதிலை அளிப்பார் என பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyBTaKbjpz.html#sthash.hb49Xe9c.dpuf