பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2015

பாரீஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றது

 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்குள் கடந்த 7-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் இயங்கிவரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றுள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சார்லி ஹெப்டோ வாரப் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த இரு மர்ம நபர்கள் பத்திரிகை ஊழியர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலை நடத்திய நபர்கள் கருப்பு நிற தலைப்பாகையுடன் கூடிய முகமூடி அணிந்து வந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். 

சமீபத்தில் ஐ.எஸ். தலைவன் அபுபக்கர் அல் பக்தாதியை கிண்டல் செய்யும் வலையில் ஒரு கார்ட்டூனை இந்த பத்திரிகை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய தாக்குதல் நடந்திருப்பதால் இதன் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், ஏமன் நாட்டில் இயங்கிவரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கம் பாரீஸ் தாக்குதலுக்கு இன்று பொறுப்பேற்றுள்ளது.