பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2015

தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர், சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது



 தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் தொடர்பாக பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.

அதன்படி தயாநிதி மாறன், 2007-இல் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே. பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். சன் தொலைக்காட்சியின் உயர் பதவிகளில் இருந்தவர்களிடமும் சிபிஐ விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி. கெளதமனை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவருடன் சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ். கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ். ரவி ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

 முறைகேடான தொலைத்தொடர்பு இணைப்பகம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்காக வி. கௌதமன், கண்ணன், ரவி ஆகி