பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் சாதாரண கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக வாக்களிப்பு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 63.45 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 67.09வீதம் வாக்கு பதிவு இடம்பெற்றதுள்ளதுடன் கல்குடா தொகுதியில் பட்டிருப்பு தொகுதியில் 58.05வீதம் வாக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நெடுந்தீவு பகுதியில் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் அதிகாரிகளை வெளியேற்றி விட்டு ஈ.பி.டி.பி குண்டர்கள் உள்ளே புகுந்து கள்ள வாக்குகள் சிலவற்றை போட்டுவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நெடுந்தீவு பகுதியில் வாக்களிப்பு தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.