பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2015

நாவற்குழி பாலத்தினுள் குதித்து நீராடிய இளைஞன் உயிரிழப்பு

நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞர் ஒருவர் நாவற்குழி பாலத்தின் தடுப்பணையிலிருந்து
கீழே குதித்த போது சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. இதில் அரியாலையைச் சேர்ந்த வி.விஜேந்திரன் (வயது 23) என்பவரே சகதியில் சிக்கி உயிரிழந்தவராவார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது; நாவற்குழி பாலத்தின் தடுப்பணையில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதில் பலர் பொழுதைக் கழிக்கும் நோக்கில் கூடுவதும் நீராடுவதும் வழமையாகியுள்ளது. இதேபோன்று இந்தப் பாலத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த விஜேந்திரன் தடுப்பணையில் மேலிருந்து தலை கீழாக குதித்துள்ளார். இவ்வாறு குதித்தவர் மீண்டும் வராததையடுத்து இளைஞர்கள்  அவரைத் தேடியுள்ளனர். இதன்போது இளைஞர் சகதியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.