பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2015

100 கிலோ கஞ்சாவுடன் இளவாலை பொலிஸாரால் நால்வர் கைது


100 கிலோ கிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் இருந்து படகு மூலம் மாதகல் கடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கைமாற்றும் வேளையில்  பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்  படி நால்வருடன் 100 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள்  வருகை தந்த முச்சக்கர வண்டி ஒன்றும்  படி ரக வாகனம் ஒன்றும்  மீட்கப்பட்டுள்ளது. இதில் மூவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும்  ஒருவர் புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் என்றும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாளை மல்லாகம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படுவர் என்றும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.