பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2015

பெங்களுரு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே மூலகொண்டப்பள்ளியில் பெங்களுரு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. வெள்ளிக்கிழமை காலை பெங்களுருவில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் மூலகொண்டப்பள்ளியில் வந்தபோது, 3 பெட்டிகள் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விபத்து நடந்த இடத்திற்கு கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. ரயில் பெட்டியில் சிக்கியிருப்பவர்களை மீட்க தேசிய பேரீடர் மீட்புக்குழுவினரும் விரைந்தனர். 

ரயில் விபத்து குறித்த விபரங்களை பெற 0471-2321237 என்ற அவசர அழைப்பு எண் வழங்கப்பட்டுள்ளது. 

ரயில் பாதையில் பாறை உருண்டு கிடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.