பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2015

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம


இலங்கை புதிய தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.
கடந்த வாரத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக விவாதங்களும் இடம்பெற்றன