பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2015

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூ.300 வழங்கப்படும்! முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூபாய் 300 வழங்கப்படும் என்று அம்மாநில
முதல் அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவர், அடுத்த மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசிக்கு பதில் மாதந்தோறும் ரூபாய் 300 வழங்கப்படும் என்றார். மேலும் +2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் கூறினார்.