பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2015

மைத்திரியின் வேலைத்திட்டத்தில் யாழில் 3000 வீடுகள்; ரவீந்திரன்


news
100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகள்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  யாழ். மாவட்ட முகாமையாளர் ப.ரவீந்திரன் தெரிவித்தார். 

 
மைத்திரி அரசாங்கத்தினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கடனடிப்படையில் வீடுகள் அமைப்பதற்கான முன்மொழிவுகள்  வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நாடளாவிய ரீதியில் குறித்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
 
 
அதனடிப்படையில் யாழ். மாவட்டத்திலும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதற்கமைய ஒரு தேர்தல் தொகுதிக்கு 300 வீடுகள்  என்ற வீதம் இங்குள்ள 10 தேர்தல் தொகுதியிலும் 3000 வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  
 
வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்டவர்கள்  பிரதேச சபைகளின் ஊடாக வீடமைப்பு அதிகார சபையின்  உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தவர்களும்  பயனாளிகளை தெரிவு செய்து வருகின்றனர்.
 
அதற்கமைய இதுவரை 10 தேர்தல் தொகுதியில் இருந்தும் 500 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
 
விரைவில் மிகுதியானவர்களும தெரிவு செய்யப்பட்டு விடுவர் என்றும் மாவட்ட முகாமையாளர் உதயன் இணையத்தள செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார். 
 
இவர்களுக்கான கடன்திட்டத்தில் ஒரு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே 3.72வீத வட்டில் மாதம் ஒன்று 1000 ரூபா வீதம் 10 வருடங்களுக்குள் பயனாளிகள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். 
 
அத்துடன் 550 சதுர அடியில் 230 சதுர அடியை ஏனும் குறித்த கடன் தொகையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் மிகுதியை எதிர்காலத்தில் தொடர்ந்து வரும் ஏனைய கடன்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=193123869312320877#sthash.QUrozk00.dpuf