பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2015

வெலே சுதாவின் பரபரப்பு வாக்குமூலம்! 36 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு


போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் வர்த்தகர் வெலே சுதா, 36 பேருக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அடங்கலாக 36 பேருக்கு எதிராகவே வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந் நிலையில் வெலே சுதாவின் விசாரணைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் விஷேட ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விஷேட பொலிஸ் குழு தொடர்ந்தும் விசாரணைகளை தொடரும் நிலையிலேயே அது அதன் மேற்பார்வை நடவடிக்கைகள் பூஜித ஜயசுந்தரவின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளது.
இதன்படி, சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.