பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2015

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியோரில் 60 பேர் மீது முதல் கட்ட சட்ட நடவடிக்கை

கருப்பு பணம் மீட்பு நடவடிக்கையின்படி வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 பேரின் பெயர் பட்டியலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் பிறகு மூன்று பேர் பெயர்கள் வெளியிடப்பட்டன. அவர்களில் டாபர் குழுவின் பிரதீப் பர்மன் உள்ளிட்ட அந்த மூன்று ஆவர். அவர்களுக்கு எதிரா சான்றுகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டன.

இந்தநிலையில் தற்போது 60 பேர் மீது முதல் கட்ட சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன. இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்களின்படி, நீதிமன்ற விசாரணைக்குப் பின்னரே தனிப்பட்ட விசாரணை நடத்த முடியும் என்பதால் இவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.