பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2015

எகிப்தின் பதில் தாக்கதலில் 7 பொதுமக்கள் உயிரிழப்பு


எகிப்தின் கிறிஸ்தவ இளைஞர்கள் 21 பேரை தலை துண்டித்து இஸ்லாமிய அரசு கிளர்ச்சியாளர்கள் கொலை செய்தமைக்கு அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல் சிசி தெரிவித்திருந்தார். அதனையடுத்து, இஸ்லாமிய அரசு கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் மீது எகிப்திய விமானங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை முதல், வான்வழி தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்தன. 

லிபியாவுக்கு அருகிலுள்ள இஸ்லாமிய அரசு கிளர்ச்சியாளர்களின் முகாம்கள், பயிற்சி நிலையங்கள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் மீது வான்வழி தாக்குதல்களை மேற் கொண்டுள்ளதாக எகிப்து, நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல்களில் பொதுமக்களின் குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதை சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களில் காணமுடிகின்றது.

லிபியாவிற்கு வேலை தேடிச் சென்ற 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் பல வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.  இந்நிலையில், கடற்கரையில் அழைத்துச் செல்லப்படும் 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு தலை துண்டித்து கொல்லப்படும் காணொலியை தீவிரவாதிகள் வெளியிட்தில் இந்த தாக்குதல்களை எகிப்து ஐ.எஸ். ஐ.எஸ்.கிளர்சியாளர்கள் மீது மேற் கொண்டுள்ளது.