பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2015

போர்க்குற்ற உள்ளக விசாரணை ; நம்பகத்தன்மை,சர்வதேச தரத்திலுமானதாகவும் அமைய வேண்டும்



இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடாத்தும் உள்நாட்டு விசாரணைகள் சர்வதேச தரத்திலான பொறிமுறையைக் கொண்டதாக அமைய வேண்டும் என ஐ.நா செயலாளர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். 
 
பான்கீ மூனின் அறிவுறுத்தலை அவரின் அலுவலகப் பேச்சாளர் எரிகான்கோ தெரிவித்துள்ளார். 
 
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
கடந்த கால யுத்தத்தில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளூர் விசாரணைகள் நம்பகமாகவும், பொறுப்புக் கூறக்கூடியதாகவும், சர்வதேச தரத்திலான பொறிமுறையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
 
போருக்குப் பின்னர் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்றனவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. இதேபோல நாட்டின் ஜனநாயகம், அபிவிருத்தியிலும் கணிசமான மாற்றங்களைக் காண முடிகின்றது. 
 
இந்த மாற்றங்களுக்கு ஐ.நா. ஆதரவுகளை வழங்கியிருந்தது. அதே ஆதரவுடன்  தொடரவே ஐ.நா. விரும்புகின்றது. எனினும் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டுப் விசாரணையை கொண்டுவந்துள்ளது.
 
அதுகுறித்து ஐ.நா. செயலாளர் கவனம் செலுத்தி வருகின்றார். இதேபோன்று இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலும் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளரும் ஆதரவுகளை வழங்குகிறார். 
 
இருப்பினும் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்கு சில சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள்  கூட்டத் தொடரில் இலங்கை கருத்துத் தெரிவிக்க வேண்டியிருக்கும். 
 
ஐக்கிய நாடுகள் சபை, யுத்தத்திற்கு பிந்திய நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிவழங்கும் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் .