பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2015

ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்


ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சுமார் 65 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராடி அல் ஹூசைனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.