பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2015

திருப்பதியில் இலங்கை அதிபர் சாமி தரிசனம்





இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் சிறிசேன திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்
செய்தார். அதிகாலை 2.30 மணி அளவில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். சிறிசேனாவுடன் குடும்ப உறுப்பினர்கள், மந்திரிகள் என 42 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கோவிலில் அவருக்கு பட்டு வஸ்திரம், ஏழுமலையான் புகைப்படங்கள், பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் காரில் ரேணிகுண்டா வந்து அங்கிருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றார். சிறிசேனா வருகையை யொட்டி திருமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறிசேனா செல்லும் வழிநெடுகிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தன