பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2015

திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பம்: சகமாணவியை கைது செய்த பொலிசார்

திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பமாக, நகைக்காக அவரது சகமாணவியே கொலை செய்த விடயம் தெரியவந்துள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் ரவியின் மகள் சசிரேகா (14), கடந்த 31-ந் திகதி பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் சசிரேகாவை காணாததால் இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் பொலிசார் வழக்குபதிவு செய்து அந்த மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், மொளசூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கிடந்த சசிரேகாவின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சசிரேகாவின் மரணம் தொடர்பாக கிளியனூர் பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தபோது மாயமான போது மாணவி அணிந்திருந்த நகைகள், அவர் சடலமாக மீட்கப்பட்டபோது இல்லாததைக் கண்டுபிடித்தனர்.
எனவே, திருட்டு காரணமாக நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, சக மாணவி ஒருவரே சசிரேகாவைக் கொலைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியைப் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.