பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2015

கழிவு ஒயில் விவகாரம்;இன்றும் போராட்டம்


சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் குடி தண்ணீர் கிணறுகள் உட்பட பாடசாலைகளின் கிணறுகளும்
பாதிக்கப்பட்டுள்ளமையினைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுன்னாகம் சிவன் கோவிலடியில் ஆசிரியர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மாகாண அரசே நீ வழங்கும் குடிநீர் மட்டும் பிரச்சினையை தீர்க்குமா? , இப்பிரதேசத்திற்கு வழங்கப்படும் நீர் சுத்தமானதா என பரிசோதித்து வழங்கு, மாகாண அரசே தமிழன் குடித்தொகையை குறைக்க நீயும் உடந்தையா?, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=867723856805264285#sthash.uf1E007u.dpuf