பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2015

துட்டகைமுனு போல் கதிர்காமத்தில் திரிசூலத்தை காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிய மகிந்த


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
துட்டகைமுனு மன்னன் போருக்கு செல்லும் முன்னர் இப்படியான வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியதாக வரலாற்று கதைகளில் கூறப்பட்டுள்ளது.
இதனால், மகிந்த ராஜபக்சவின் வேண்டுதலில் ஏதேனும் விசேடம் இருக்கலாம் என பலர் கூறுகின்றனர்.
சில நேரம் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வர எண்ணியிருக்கலாம் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி நேற்று கதிர்காமம் சென்றிருந்ததுடன் 84 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டதுடன் கிரிவேஹேர விகாரையில் இரவு தர்ம உபதேசத்திலும் கலந்து கொண்டார்.
அவருடன் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, புதல்வர்களான நாமல் ராஜபக்ச, யோஷித்த ராஜபக்ச, அண்ணன் மகனான ஷசீந்திர ராஜபக்ச, உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோரும் சென்றிருந்தனர்.
முன்னர் மகிந்த ராஜபக்ச, கதிர்காமம் செல்லும் போது அவருடன் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் அரசியல்வாதிகள் அங்கு செல்வது வழக்கம். எனினும் இம்முறை அவர்களைக் காணக்கிடைக்கவில்லை.