35வது தேசிய விளையாட்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
பெண்களுக்கான 50 மீ., 'பிரஸ்ட் ஸ்டிரோக்' பிரிவு நீச்சலில், தமிழகத்தின் ஜெயவீனா பந்தய துாரத்தை 34.43 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதன்மூலம் இவர் இத்தொடரில் 2வது பதக்கத்தை கைப்பற்றினார்.
இவரது தங்க பதக்கம் தமிழக அணியை பதக்கப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேற்றி உள்ளது.
இதுகுறித்து தலைவாசல் விஜய் கூறுகையில், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே மகளுடன்தான் இருக்கிறேன்.
அவள் தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்காக இருந்தது என்றும் இதற்கான அனைத்து படபிடிப்புகளையும் கூட ரத்து செய்து விட்டேன் எனவும் கூறியுள்ளார்.
|