பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2015

டொராண்டோவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் வேண்டியும், தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் யாழ் பல்கலைகழக சமூகமும் தமிழ் சமூகமும் தாயகத்தில் முன்னெடுத்த போராட்டத்தின் தொடராக உலகப் பரப்பெங்கும் தமிழர்கள் நடத்தி வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக கனடிய மண்ணிலும் இன்று பெப்ரவரி 24, 2015, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை ரொறொன்ரோவில் 360 யுனிவெர்சிட்டி வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்க துணைத் தூரலாலயத்தின் முன்பாக உணர்வெழுச்சியுடனான கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.:

ஈழத்து தமிழினத்தின் மீது இலங்கை அரசு கட்டவிழ்த்த இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை பற்றி உலகமே அறிந்திருந்தும் ஐ. நா. வினால் மார்ச் மாதம் நடைபெற இருந்த அனைத்துலக விசாரணையை இலங்கை அரசின் வேண்டுதலுக்கு ஏற்ப ஐ.நா. பிற்போட்டு இருப்பது உலகத் தமிழ் மக்களை வேதனையும் ஏமாற்றமும் அதிருப்தியும் கொள்ள வைத்திருக்கின்றமையை விசனத்துடன் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்தினார்கள் மக்கள்.

தமிழின அழிப்புகள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற அனைத்து அநீதிகளுக்கும் அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தியும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் தமிழீழ தாயகத்திலும் உலகெங்கும் தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் நீதி வேண்டி எழுகை கொண்ட கவனஈர்ப்புப் போராட்டங்கள் இன்றைய நாளில் நடைபெற்ற நிலையில் கனடிய தமிழர்களும் இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தி உள்ளார்கள். .
ரொறொன்ரோ காலநிலை அவதான நிலையம் கடும் குளிர் அபாய எச்சரிக்கை விடுத்திருந்த -30 பாகை செல்சியஸ் இலும் குறைந்த கடும் குளிர் காலநிலையிலும் கடும் குளிர் காற்றுடனான பனி பொழிந்த காலநிலயில் இவ் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது

10478426_772722479490489_2517115170507397485_o10854809_772722486157155_1205367187093611523_o10869324_772722819490455_1870339323354216301_o10959945_772723026157101_7023721048544022289_o11025307_772722832823787_4174036896666964743_o