பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2015

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ். – அதிமுகவினர் மரியாதை

 
அண்ணா நினைவு தினத்தையொட்டி அதி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், அ.தி.மு.க.வினர் இன்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

காலை 10.20 மணிக்கு முதல்–அமைச்சர் பன்னீர் செல்வம் அண்ணா நினைவிடத்துக்கு வந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும், மதுசூதனனும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், மேயர் சைதை துரைசாமி, முன்னாள் எம்.பி. செம்மலை, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்.

எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், ராஜலட்சுமி, மீனவர் அணி ரமேஷ், ஆதிராஜாராம், நிர்மலா பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சேலம் ரவிச்சந்திரன், கவுன்சிலர் டி.சிவராஜ் உள்பட ஏராள மானோர் அஞ்சலி செலுத் தினார்கள்.