பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2015

நான் போயஸ்கார்டனுக்கு போகவில்லை : முல்லைவேந்தன் மறுப்பு


தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், புதுக்கோட்டையை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தர்மபுரியை சேர்ந்த முன்னாள் தமிழக அமைச்சர் முல்லைவேந்தன், மற்றும் திருநெல்வேலியைச்சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ( எம்.ஜி.ஆர். அவையில் அமைச்சர் ) கருப்பசாமி பாண்டியன் ஆகிய ஐந்து பேரும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணையவதற்காக முடிவெடுத்துவிட்டனர்.

இதற்காக அவர்கள் போயஸ்கார்டனில் காத்திருக்கின்றனர்.  ஜெயலலிதா இன்னும் அவர்களை சந்திக்கவில்லை.  சிறிது நேரத்தில் அவர்களை சந்திப்பார் என்று தெரிகிறது. 

இந்நிலையில் முல்லைவேந்தனை நமது செய்தியாளர் தொடர்புகொண்டபோது,  ‘’நான் போயஸ்கார்டனில் இல்லை.  வேறொரு வேலை விசயமாக சென்னையில் இருக்கிறேன்’’ என்று மறுப்பு தெரிவித்தார்.