பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2015

முதல்வர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்எல்ஏ பதவியை இழந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.  அவர், முதல்வராக பதவியேற்ற பின் முதல்வர் இருக்கையில் பன்னீர்செல்வம் அமரவில்லை. மாறாக நிதியமைச்சர் அமரும் இருக்கையில்தான் அவர் அமர்ந்திருந்தார். அவரின் இந்த செயல் குறித்து தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைபற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்தார் பன்னீர் செல்வம்.

 இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் எங்கு அமர்வார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவியது.

 இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் இருக்கையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்தது, அங்கிருப்போரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.